/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திருமணம் செய்து பணம் மோசடி சீரியல் நடிகைக்கு போலீஸ் சம்மன்
/
திருமணம் செய்து பணம் மோசடி சீரியல் நடிகைக்கு போலீஸ் சம்மன்
திருமணம் செய்து பணம் மோசடி சீரியல் நடிகைக்கு போலீஸ் சம்மன்
திருமணம் செய்து பணம் மோசடி சீரியல் நடிகைக்கு போலீஸ் சம்மன்
ADDED : ஜூன் 17, 2025 12:46 AM
பூந்தமல்லி, குன்றத்துாரை அடுத்த கொளப்பாக்கத்தை சேர்ந்தவர் கண்ணன்; தொழில் வர்த்தகர். இவர், பூந்தமல்லி காவல் நிலையத்தில் அளித்துள்ள புகார்:
கடந்த 2023ம் ஆண்டு தன் நண்பர் வாயிலாக, சீரியல் நடிகை ரிஹானா பேகம் அறிமுகமானார். 'பிரபல தொலைக்காட்சி சீரியலில் நடிக்கிறேன். அபிபுல்லா என்பவருடன் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. கணவரை விவாகரத்து செய்துவிட்டேன்' என்று கூறி, என்னிடம் நட்பாக பழகினார்.
இருவரும் 2024ல் திருமணம் செய்து கொண்டோம். குழந்தைகள் படிப்பு, தங்க நகை வாங்க என, பல்வேறு தேவைகளுக்கு, ரிஹானா என்னிடம் இருந்து, 20 லட்சம் ரூபாய் வரை பெற்றுள்ளார்.
தான் சினிமா துறையில் பணிபுரிவதால் அடிக்கடி வெளியூர் செல்ல வேண்டும் எனக்கூறி வந்ததால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அதன்பின் ரிஹானா பேகம் குறித்து விசாரித்தபோது, அவர் முதல் கணவரை விவாகரத்து செய்யாமல், தன்னை ஏமாற்றி திருமணம் செய்து நகை, பணத்தை பெற்று மோசடி செய்தது தெரிய வந்தது.
ரிஹானா பேகம் மீது நடவடிக்கை எடுத்து நகை, பணத்தை மீட்டு தர வேண்டும்.
இவ்வாறு புகாரில் கூறியுள்ளார்.
இதையடுத்து, 'நடிகை ரிஹானா பேகமும், புகார்தாரர் கண்ணனும் வரும 18 ம் தேதி காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும்' என, சம்மன் அனுப்பி உள்ளனர்.
***