ADDED : அக் 23, 2026 09:08 PM

அ நிறம் | அளவு
அம்பத்துார்: அம்பத்துார் கருக்கு பிரதான சாலையில், பூமிக்கு அடியில் செல்லும் பழமையான கழிவு நீர் குழாய்களில் ஏற்படும் தொடர் கசிவு மற்றும் சேதம் காரணமாக, சாலை அடிக்கடி உள்வாங்கி, ராட்சத பள்ளங்கள் ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது.
அந்த வகையில், கருக்கு பிரதான சாலையில் மேனாம்பேடு, டி.டி.பி., காலனி பகுதியில் இன்று (அக்.,23) திடீரென சாலை உள்வாங்கி, 8 அடி அகலம் மற்றும் 10 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
கழிவுநீர் குழாய் சேதமடைந்து கழிவுநீர் வெளியேறியதால், மண் அரிப்பு ஏற்பட்டு சாலை உள்வாங்கியதாகவும், சீரமைப்பு பணிகள் விரைவில் தொடங்கி நடைபெறும் எனவும், குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
