/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கோயம்பேடு சந்தையில் தொடரும் மின் வெட்டு
/
கோயம்பேடு சந்தையில் தொடரும் மின் வெட்டு
ADDED : ஜன 24, 2025 12:31 AM
கோயம்பேடு, கோயம்பேடு பூ சந்தையில் மின் கேபிள் பழுதால் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால், வியாபாரிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
கோயம்பேடு பூ சந்தையில், 490 கடைகள் உள்ளன. இந்த கடைகளில், 1996ம் ஆண்டு சந்தை திறந்த போது அமைக்கப்பட்ட மின் வடங்களே உள்ளன.
இதனால், அடிக்கடி மின்வடங்கள் பழுதாகி, மின் வெட்டு ஏற்பட்டு வந்தது. இதையடுத்து, அங்காடி நிர்வாக குழு சார்பில், ஒரு கோடி ரூபாய் மதிப்பிற்கு, கடந்த 2023ம் ஆண்டு மின்வடங்கள் மாற்றி அமைக்கப்பட்டன.
ஆனால், தற்போது இந்த மின்வடங்கள் அடிக்கடி பழுதாகி, தொடர் மின் வெட்டு ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் காலை 5:00 மணியளவில், மின்வடம் பழுதால் மின் தடை ஏற்பட்டது.
அதேபோல், நேற்று காலை 5:00 மணிக்கும் மின் வெட்டு ஏற்பட்டது. இதனால், பல கடைகள் இருளில் மூழ்கி வியாபாரம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
இதுகுறித்து புகார் தெரிவித்தால், தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் அங்காடி நிர்வாக குழுவினர், மாறி மாறி கை காட்டி தப்பிக்கின்றனர்.
எனவே, இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என, வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.