/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
உயர்கோபுர மின் கம்பிகள் முறிவால் வடசென்னையில் நள்ளிரவில் மின்தடை
/
உயர்கோபுர மின் கம்பிகள் முறிவால் வடசென்னையில் நள்ளிரவில் மின்தடை
உயர்கோபுர மின் கம்பிகள் முறிவால் வடசென்னையில் நள்ளிரவில் மின்தடை
உயர்கோபுர மின் கம்பிகள் முறிவால் வடசென்னையில் நள்ளிரவில் மின்தடை
ADDED : ஜூலை 11, 2025 12:31 AM
சென்னை :உயர்கோபுர மின் கம்பிகளில் முறிவு ஏற்பட்டதால், வடசென்னையில் நேற்று முன்தினம் நள்ளிரவு மூன்று மணி நேரம் மின்தடை ஏற்பட்டது.
நள்ளிரவிலும் மின் ஊழியர்கள் திறம்பட செயல்பட்டு, கம்பிகளை சரி செய்தனர். வடசென்னையின் திருவொற்றியூர், எண்ணுார், மணலியில் நேற்று முன்தினம் இரவு திடீரென, 9:40 மணியளவில் மின்தடை ஏற்பட்டது.
பின், 12:50 மணிக்கு மின் பிரச்னை சீரானது. உயர்கோபுர கம்பிகள் முறிவுதான் மின்தடைக்கு காரணம்.
இந்நிலையில், மின்வாரிய இயக்குநர் ராதாகிருஷ்ணன், சடையங்குப்பத்தில் பழுதான உயர்மின் கோபுரத்தை பார்வையிட்டார்.
பின், ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
பழுதான மின் கோபுரம் சடையங்குப்பம் ஏரிக்கு பக்கத்தில் உள்ளது. மின் கம்பி முறிவை பிரத்யேக பயிற்சி பெற்ற ஊழியர்களால்தான் சரி செய்ய முடியும்.
கும்மிடிப்பூண்டியில் இருந்து வந்த ஊழியர்கள், ஜெனரேட்டர் உதவியுடன், சரி செய்துள்ளனர். அவர்களின் பணி பாராட்டுக்குரியது.
இவ்வாறு, ராதாகிருஷ்ணன் கூறினார்.