/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
புத்தாண்டு இரவு மின் தடை: கொசுக்கடியால் மக்கள் அவதி
/
புத்தாண்டு இரவு மின் தடை: கொசுக்கடியால் மக்கள் அவதி
புத்தாண்டு இரவு மின் தடை: கொசுக்கடியால் மக்கள் அவதி
புத்தாண்டு இரவு மின் தடை: கொசுக்கடியால் மக்கள் அவதி
ADDED : ஜன 02, 2026 05:44 AM
குன்றத்துார்: குன்றத்துார் அருகே, திருமுடிவாக்கம் துணை மின் நிலையத்தில் இருந்து பழந்தண்டலம், எருமையூர், சோமங்கலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது.
நேற்று முன்தினம் இரவு, ஆங்கில புத்தாண்டை மக்கள் கொண்டா டிய நிலையில், இரவு 12:30 மணிக்கு, குன்றத்துார் சுற்றுபுறத்தில், காற்றுடன் இரண்டு மணி நேரம் மழை பெய்தது.
இதனால், திருமுடிவாக்கம் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் வினியோகம் செய்யப்படும் சோமங்கலம், நடுவீரப் பட்டு, பூந்தண்டலம் உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது.
அதிகாலை 4:00 மணிக்கே, மீண்டும் மின் இணைப்பு வழங்கப்பட்டது.பொதுமக்கள் கூறுகையில், 'புத்தாண்டு இரவு மின் தடையால், இரவு முழுதும் கொசுக்கடியால் துாக்கமின்றி தவித்தோம்.
மின்வாரிய அலுவலகத் தை பலமுறை தொடர்பு கொண்டும் அலுவலர்கள் போனை எடுக்கவில்லை' என்றனர்.
5 மணி நேரம் அதேபோல், செங்குன்றம் சந்தை, ஜி.என்.டி., சாலை, நாரவாரிகுப்பம், வடகரை சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை 11:00 மணிக்கு மின் தடை ஏற்பட்டது.
செங்குன்றம் தற்காலிக பேருந்து நிலையம் அருகே உள்ள மின்மாற்றியில் ஏற்பட்ட பழுதால், மின் தடை ஏற்பட்டது தெரியவந்தது. மாலை 5:00 மணி வரை மின் தடை நீடித்தது.
ஐந்து மணி நேரத்திற்கு மேல், புத்தாண்டு நாளில் இரு ளில் தவித்ததாக, மக்கள் தெரிவித்தனர்.

