தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/மின் நிலைய ஒப்பந்த பணியாளர்கள் போராட்டத்துக்கு இடைக்கால தடை

மின் நிலைய ஒப்பந்த பணியாளர்கள் போராட்டத்துக்கு இடைக்கால தடை

மின் நிலைய ஒப்பந்த பணியாளர்கள் போராட்டத்துக்கு இடைக்கால தடை


ADDED : நவ 10, 2026 10:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 10, 2026 10:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: வடசென்னை அனல்மின் நிலைய ஒப்பந்த பணியாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பணிவரன்முறை உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வடசென்னை அனல்மின் நிலைய ஒப்பந்தப் பணியாளர்கள், நாளை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.

இதனால், மின் பற்றாக்குறை ஏற்பட்டு, மின் தடை ஏற்படும் என்பதால், போராட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி, சமூக ஆர்வலர் வினீத் குமார், சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், எஸ்.எம். சுப்பிரமணியம், ஆர்.ராஜேஷ் விவேகானந்தன் அடங்கிய அமர்வு, வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு இடைக்காலத் தடை விதித்தது. மேலும், மனுவிற்கு தமிழக அரசு பதில் அளிக்கவும் உத்தரவிட்டு, விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us