/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'கூலெஸ்ட் ஸ்டோர்' விருதை வென்ற பிரின்ஸ் ஜுவல்லரி
/
'கூலெஸ்ட் ஸ்டோர்' விருதை வென்ற பிரின்ஸ் ஜுவல்லரி
ADDED : அக் 04, 2025 01:51 AM
சென்னை, பிரின்ஸ் ஜுவல்லரி, நாட்டின், 'கூலெஸ்ட் ஸ்டோர் அவார்ட்ஸ் -- 2025' ஆறாவது பதிப்பில், 'இந்தியாவின் கூலெஸ்ட் ஸ்டோர் டூ வொர்க் இன்' விருதை வென்றுள்ளது.
இதனுடன், பிரின்ஸ் ஜுவல்லரி நிறுவன இயக்குநர் ஆன்டனி பிரின்ஸ், தலைமைத்துவம் மற்றும் நவீன நகை கடை வியாபாரத்தில் கொண்டு வந்த புதுமைகளுக்காக, 'இந்தியாவின் கூலெஸ்ட் நெக்ஸ்ட் ஜென் அவார்டு' விருதையும் பெற்றுள்ளார்.
இந்த விருதுகள், டில்லியில் சமீபத்தில் இந்திய இயற்கை வைர விற்பனையாளர்கள் கூட்டமைப்பு மற்றும், 'கவ்டர் இந்தியா ேஷா' சார்பில் நடந்த நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது.
இதுகுறித்து, பிரின்ஸ் ஜுவல்லரி நிறுவன இயக்குநர் ஆன்டனிபிரின்ஸ் கூறுகையில், ''இந்த விருது எங்கள் குழுவின் அர்ப்பணிப்புக்கும், தினமும் புதுமைகளை செய்ய எங்களை ஊக்குவிக்கும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கும் உரியது,'' என்றார்.