/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கணவருடன் படுத்திருந்த பெண்ணிடம் சில்மிஷம் செய்த திருடனுக்கு 'காப்பு'
/
கணவருடன் படுத்திருந்த பெண்ணிடம் சில்மிஷம் செய்த திருடனுக்கு 'காப்பு'
கணவருடன் படுத்திருந்த பெண்ணிடம் சில்மிஷம் செய்த திருடனுக்கு 'காப்பு'
கணவருடன் படுத்திருந்த பெண்ணிடம் சில்மிஷம் செய்த திருடனுக்கு 'காப்பு'
ADDED : ஆக 02, 2025 01:19 AM
சென்னை, மயிலாப்பூரில், அடுக்குமாடி குடியிருப்பின் வளாகத்தில், கணவருடன் படுத்திருந்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட திருடனை, போலீசார் கைது செய்தனர்.
மயிலாப்பூர் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், 25 ஆண்டுகளாக 55 வயது பெண் வீட்டு வேலை செய்து, அங்கேயே தங்கியுள்ளார். அதே குடியிருப்பில், அவரது கணவர் காவலாளியாக பணிபுரிகிறார்.
கடந்த 30ம் தேதி இரவு, அடுக்குமாடி குடியிருப்பின் சுற்றுச்சுவர் ஏறி குதித்த, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தைச் சேர்ந்த சண்முகம், 60, கணவருடன் துாங்கி கொண்டிருந்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். அந்த பெண் கூச்சலிடவே, அந்நபர் அங்கிருந்து தப்பினார்.
இதுகுறித்து விசாரித்த மயிலாப்பூர் போலீசார், சண்முகத்தை நேற்று கைது செய்தனர்.
விசாரணையில், சம்பவ நாளன்று அதே பகுதியில் வேறொரு அடுக்குமாடி குடியிருப்பில் புகுந்து மொபைல் போன் திருடியது தெரிந்தது.
பெண் துாங்கிய குடியிருப்பில் திருட வந்த சண்முகம், சபலத்தில் பெண்ணிடம் சில்மிஷம் செய்தது தெரிந்தது.
சிறுவனிடம் சீண்டல் புளியந்தோப்பு காவல் மாவட்டத்தைச் சேர்ந்த 38 வயது பெண்ணின் 17 வயது மகன், வீட்டில் இருந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, எதிர் வீட்டில் வசிக்கும் நாகராஜ், 50, என்பவர், சிறுவனை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார்.
இதனால் சிறுவனின் மர்ம உறுப்பில் காயம் ஏற்பட்டது. புளியந்தோப்பு போலீசார், நாகராஜை நேற்று, 'போக்சோ'வில் கைது செய்தனர்.
பெண்ணுக்கு தொல்லை புரசைவாக்கத்தைச் சேர்ந்த, 25 வயது இளம் பெண், கடந்த 31ம் தேதி, 'பைக் டாக்சி'யில் தேனாம்பேட்டையில் உள்ள தன் அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தார்.
பைக் ஓட்டுநரான நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ்குமார், 45, பைக்கில் செல்லும்போதே பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
அந்த பெண் தேனாம்பேட்டை பகுதியில் இறங்கி, போலீசில் புகார் அளித்தார். தேனாம்பேட்டை மகளிர் போலீசார் சதீஷ்குமாரை, கைது செய்தனர்.
பேருந்தில் 'சில்மிஷம்' தாம்பரத்தைச் சேர்ந்த 23 வயது பெண், கடந்த 27ம் தேதி, வேளச்சேரிக்கு மாநகர பேருந்தில் பயணித்தார். அவருக்கு பின்னால் நின்ற நபர், பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். அவரை எச்சரித்து, அப்பெண் பேருந்தில் இருந்து இறங்கினார்.
இந்நிலையில் நேற்று, வேளச்சேரி பேருந்தில் பயணித்த அப்பெண்ணிடம், அதே நபர் மீண்டும் சீண்டியுள்ளார்.
இதுகுறித்து அப்பெண் காவல் துறை கட்டுப்பாட்டு மையத்திற்கு புகார் அளித்தார்.
பேருந்து, விஜயநகர் பேருந்து நிலையம் வந்ததும், அங்கு தயாராக இருந்த போலீசார், பெண்ணிடம் சில்மிஷம் செய்த நபரை பிடித்தனர்.
கிழக்கு தாம்பரம், கணபதிபுரத்தைச் சேர்ந்த ராஜா, 27, என்பவரை கைது செய்தனர். அவர், வேளச்சேரியில் உள்ள பிரபல துணிக்கடையில் விற்பனை பிரிவு மேலாளராக பணிபுரிவது தெரியவந்தது.

