/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வியாசர்பாடியில் தொடர் மின் தடை இரு இடங்களில் மறியல் போராட்டம்
/
வியாசர்பாடியில் தொடர் மின் தடை இரு இடங்களில் மறியல் போராட்டம்
வியாசர்பாடியில் தொடர் மின் தடை இரு இடங்களில் மறியல் போராட்டம்
வியாசர்பாடியில் தொடர் மின் தடை இரு இடங்களில் மறியல் போராட்டம்
ADDED : ஜூலை 14, 2025 02:07 AM
வியாசர்பாடி:தொடர் மின் தடையை கண்டித்து, வியாசர்பாடியில் இரு இடங்களில் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வியாசர்பாடி, சாமியார் தோட்டம், பி.வி.காலனி உள்ளிட்ட பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து மின் தடை ஏற்பட்டு வருகிறது. இது குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.
இந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு 11:00 மணி முதல் நேற்று அதிகாலை 1:00 மணி வரை மின் தடை ஏற்பட்டுள்ளது. இதனால், புழுக்கத்தால் முதியோர், குழந்தைகள் துாங்க முடியாமல் அவதியடைந்தனர்.
ஏராளமானோர் வீட்டிற்கு வெளியே தஞ்சம் புகுந்தனர். ஆத்திரமடைந்த மக்கள் ஒன்று சேர்ந்து, டாக்டர் அம்பேத்கர் கல்லுாரி சாலையில் 50க்கும் மேற்பட்டோரும் சாமியார் தோட்டம் சந்திப்பில் 40க்கும் மேற்பட்டோரும் மறியலில் ஈடுபட்டனர்.
எம்.கே.பி.நகர் மற்றும் வியாசர்பாடி போலீசார், நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து பொதுமக்களிடம் சமரசம் பேசியதை அடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர்.