/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பொது - தண்டவாளத்தில் 'போல்ட்' கழற்றியதால் பரபரப்பு
/
பொது - தண்டவாளத்தில் 'போல்ட்' கழற்றியதால் பரபரப்பு
பொது - தண்டவாளத்தில் 'போல்ட்' கழற்றியதால் பரபரப்பு
பொது - தண்டவாளத்தில் 'போல்ட்' கழற்றியதால் பரபரப்பு
ADDED : மே 30, 2025 12:15 AM

வில்லிவாக்கம் :வில்லிவாக்கம் ரயில் நிலையம் அடுத்த, 'லோகோ ஒர்க் ஷாப்' அருகில், ரயில்களை பராமரிக்கும் பணிமனை பகுதியில், தண்டவாளங்களை மாற்றும் 'பாயின்ட் மேன்' ஊழியர், நேற்று அதிகாலை 1:00 மணிக்கு, பாதைகளை சோதனை செய்துள்ளார்.
அப்போது, தண்டவாளங்களை பிரிக்கும், 'லிவர்' அருகில், வாலிபர் ஒருவர் இருப்பதை பார்த்து, 'டார்ச் லைட்' அடித்தும், அசையாமல் இருந்துள்ளார்.
இதையடுத்து, ஆர்.பி.எப்., போலீசார் வந்து பார்த்தபோது, தண்டவளத்தில் போல்டு, நட்டு ஆகியவற்றை, வாலிபர் கழற்றி கொண்டிருந்தார்.
இதையடுத்து அவரை பிடித்து விசாரித்தபோது, பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த ராஜுவ், 30, என்பதும், குடும்ப பிரச்னை காரணமாக அங்கிருந்து அடித்து துரத்தப்பட்டதும் தெரிந்தது.
சற்று மன நலம் பாதிக்கப்பட்டவராகவும், அதீத போதையில் இருந்ததாலும், அந்த வாலிபரிடம், போதிய விபரங்களை, போலீசாரால் அறிய முடியவில்லை.
எனினும், இதுபோல் வேற தண்டவாளங்களில் போல்ட், நட்டு கழற்றியுள்ளரா, திருவாலங்காடு ரயில் விபத்து சம்பவத்தில் தொடர்புடையவரா என, போலீசார் அவரிடம் விசாரிக்கின்றனர்.

