/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஹாக்கியில் பஞ்சாப் அணி 'சாம்பியன்' பைனலில் ஜார்க்கண்ட் ஏமாற்றம்
/
ஹாக்கியில் பஞ்சாப் அணி 'சாம்பியன்' பைனலில் ஜார்க்கண்ட் ஏமாற்றம்
ஹாக்கியில் பஞ்சாப் அணி 'சாம்பியன்' பைனலில் ஜார்க்கண்ட் ஏமாற்றம்
ஹாக்கியில் பஞ்சாப் அணி 'சாம்பியன்' பைனலில் ஜார்க்கண்ட் ஏமாற்றம்
ADDED : ஆக 09, 2025 12:25 AM

சென்னை, தேசிய சப் - ஜூனியர் ஹாக்கி இறுதிப்போட்டியில், பஞ்சாப் 4 - 3 என்ற கோல்கணக்கில் ஜார்க்கண்ட் அணியை வீழ்த்தி, 'சாம்பியன்' கோப்பையை வென்றது.
'ஹாக்கி இந்தியா' மற்றும் 'ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு' அமைப்புகள் இணைந்து, 15வது தேசிய சப் - ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியை, எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடத்தின.
இதன் இறுதிப்போட்டி நேற்று நடந்தது. இதில், பஞ்சாப் மற்றும் ஜார்க்கண்ட் அணிகள் மோதின.
ஆட்டத்தின் 21வது நிமிடம் மற்றும் 24வது நிமிடத்தில், முதல் இரண்டு கோல்கள் அடித்து ஜார்க்கண்ட் அணி முன்னிலை பெற்றது. தொடர்ந்து போராடிய பஞ்சாப் 29வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை, கோலாக மாற்றியது. அடுத்த நிமிடத்தில் ஒரு பீல்ட் கோல் அடிக்க, முதல் பாதியில் ஆட்டம் 2 - 2 என, சம நிலையில் இருந்தது.
இரண்டாவது பாதி 42வது நிமிடத்தில் ஜார்க்கண்டும், 45வது நிமிடத்தில் பஞ்சாப் ஒரு கோல் அடிக்க 3 - 3 என்ற கோல் கணக்கில், ஆட்டம் மீண்டும் சூடுபிடித்தது. 53வது நிமிடத்தில் பஞ்சாப் ஒரு கோல் அடித்தது. அதன்பின் இரு அணிகளும் கோல் அடிக்க போராடியது தடுக்கப்பட்டது. முடிவில் பஞ்சாப் அணி 4 - 3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.
மூன்றாவது இடத்திற்கான போட்டியில் உத்தர பிரதேசம் அணி, 5 - 3 என்ற கோல் கணக்கில் மத்திய பிரதேசம் அணியை வீழ்த்தியது.

