/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிறுமியை கடத்த முயன்ற ராஜஸ்தான் வாலிபருக்கு 'வலை '
/
சிறுமியை கடத்த முயன்ற ராஜஸ்தான் வாலிபருக்கு 'வலை '
சிறுமியை கடத்த முயன்ற ராஜஸ்தான் வாலிபருக்கு 'வலை '
சிறுமியை கடத்த முயன்ற ராஜஸ்தான் வாலிபருக்கு 'வலை '
ADDED : ஜன 30, 2025 12:50 AM
புளியந்தோப்புபுளியந்தோப்பு காவல் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி, ஜவுளிக் கடையில் வேலை பார்த்து வந்தார். அதே கடையில் மேலாளராக பணிபுரிந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சுரேஷ் ராவ் என்பவருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதை அறிந்து, 'சிறுமியை வேலைக்கு செல்ல வேண்டாம்' என பெற்றோர் நிறுத்தியுள்ளனர். இந்த நிலையில் கடந்த 27ம் தேதி சிறுமி மாயமானார்.
இது குறித்து, புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதற்கிடையே நள்ளிரவு சிறுமி வீடு திரும்பியுள்ளார். விசாரணையில், அவரை சுரேஷ் ராவ் ராஜஸ்தானுக்கு கடத்த இருந்ததும், சிறுமி அவரிடம் இருந்து தப்பி வீடு திரும்பியதும் தெரிய வந்தது. பின், சுரேஷ் ராவ் மட்டும் ராஜஸ்தானுக்கு சென்றுள்ளார். இதையடுத்து சிறுமியை கடத்த முயன்ற சுரேஷ் ராவ் மீது, போலீசார் 'போக்சோ' சட்டத்தின்கீழ் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.