/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ராமசாமி கோப்பை கிரிக்கெட் ராமச்சந்திரா பள்ளி வெற்றி
/
ராமசாமி கோப்பை கிரிக்கெட் ராமச்சந்திரா பள்ளி வெற்றி
ராமசாமி கோப்பை கிரிக்கெட் ராமச்சந்திரா பள்ளி வெற்றி
ராமசாமி கோப்பை கிரிக்கெட் ராமச்சந்திரா பள்ளி வெற்றி
ADDED : பிப் 03, 2025 02:36 AM

சென்னை:தமிழக கிரிக்கெட் சங்கம் சார்பில், ராமச்சந்திரா கோப்பைக்கான, பள்ளிகள் இடையிலான கிரிக்கெட் போட்டிகள், சென்னையின் பல மைதானங்களில் நடந்து வருகின்றன.
இதில், 16 வயதுக்குட்பட்ட, 100க்கும் மேற்பட்ட பள்ளி அணிகள் பங்கேற்றுள்ளன. போட்டிகள், 30 ஓவர் அடிப்படையில், 'லீக்' மற்றும் 'நாக் அவுட்' முறையில் நடக்கின்றன.
சேத்துப்பட்டு பல்கலை மைதானத்தில் நடந்த போட்டியில், கொட்டிவாக்கம், ராமச்சந்திரா பள்ளி அணியுடன், எழும்பூர், டான்பாஸ்கோ பள்ளி அணி பலப்பரீட்டை நடத்தியது.
முதலில் களமிறங்கிய ராமச்சந்திரா பள்ளி அணி, ஆறு விக்கெட் இழப்பிற்கு 133 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக, யோக பாலன் 36 ரன்கள் எடுத்தார்.
எட்டிப் பிடிக்கும் இலக்குடன், அடுத்து களமிறங்கிய டான்பாஸ்கோ பள்ளி அணிக்கு, பிரணவ், ஜெர்ரி முறையே 45, 30 ரன்கள் அடித்து நம்பிக்கையளித்தனர். ஆனால், எதிரணி பந்து வீச்சாளர் நிதின், அந்த நம்பிக்கையை தகர்த்தார்.
இறுதியில், டான்பாஸ்கோ பள்ளி அணி, 29.3 ஓவரில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 128 ரன்களில் ஆட்மிழந்தது. இதனால், ராமச்சந்திரா பள்ளி அணி, 5 ரன் வித்தியாசத்தில், 'திரில்' வெற்றி பெற்றது.

