/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பாலியல் பலாத்காரம் : கோவில் பூசாரி மீது பெண் புகார்
/
பாலியல் பலாத்காரம் : கோவில் பூசாரி மீது பெண் புகார்
பாலியல் பலாத்காரம் : கோவில் பூசாரி மீது பெண் புகார்
பாலியல் பலாத்காரம் : கோவில் பூசாரி மீது பெண் புகார்
ADDED : ஜூலை 11, 2025 12:27 AM
வடபழனி,பள்ளிக்கரணை கோவில் பூசாரி, பாலியல் பலாத்காரம் செய்ததாக இளம்பெண் புகார் அளித்துள்ளார்.
பள்ளிக்கரணையைச் சேர்ந்த 27 வயது பெண், தெற்கு மண்டல இணை கமிஷனரிடம் ஒரு புகார் அளித்தார்.
அதன் விபரம்:
பள்ளிக்கரணை ஆதிபுரீஸ்வரர் கோவிலில் பூசாரியாக பணிபுரியும், ஜல்லடையன்பேட்டையைச் சேர்ந்த அசோக் பாரதி, 39, என்பவர், தீய சக்திகளை அழிக்க ருத்ராட்ச மணிகளை தருவதாக கூறினார்.
அதற்காக என்னை, வடபழனியில் உள்ள ஒரு கோவிலுக்கு, கடந்த மாதம் 28ம் தேதி அழைத்து சென்றார். பின் கோவில் மூடியுள்ளதாக கூறி, பக்தவத்சலம் காலனியில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு அழைத்து சென்று, பாலியல் பலாத்காரம் செய்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது
அதேபோல் கோவில் பூசாரி அசோக்பாரதியும், வடபழனி காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார்.
அதில், 'பள்ளிக்கரணையைச் சேர்ந்த 27 வயது இளம்பெண், குடும்ப பிரச்னை குறித்து பேச வேண்டும் என, என்னிடம் கூறினார். இதையடுத்து அவரை, வடபழனியில் உள்ள உறவினர் வீட்டிற்கு அழைத்துச் சென்றேன்.
'அங்கு வந்த இளம்பெண்ணின் கணவர், அப்பெண்ணை தாக்கி, எங்களை புகைப்படம் எடுத்து கொண்டார். இதை காட்டி 10 லட்சம் ரூபாய் தர வேண்டும் என மிரட்டுகிறார்' என, குறிப்பிட்டுள்ளார்.
இரு புகார்கள் குறித்தும் வடபழனி மகளிர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.