ADDED : செப் 11, 2025 02:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில், சென்னையில் வரும் 13ம் தேதி ரேஷன் குறைதீர் முகாம் நடக்கிறது. காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கும் முகாமில், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் உள்ளிட்ட சேவைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
மேலும், ரேஷன் கடைகள் மற்றும் தனியார் அங்காடிகளில் விற்கப்படும் பொருட்கள், சேவைகள் தொடர்பாக மக்கள் புகார் அளிக்கலாம் என, உணவு துறை தெரிவித்துள்ளது.