ADDED : அக் 09, 2024 12:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, இலங்கையைச் சேர்ந்தவர் முகமது பயாஸ், 40. நேற்று முன்தினம் மதியம், சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் ஆட்டோவில் சென்றபோது, 5,100 டாலர் அடங்கிய கைப்பையை தவறவிட்டுள்ளார். ஆயிரம்விளக்கு போலீசார் விசாரித்தனர்.
ஆட்டோ ஓட்டுனரான திருநின்றவூரைச் சேர்ந்த சாகுல் அகமது, 40, என்பவரிடமிருந்து கைப்பையை மீட்டு ஒப்படைத்தனர்.
தவறவிட்ட டாலரின் இந்திய ரூபாய் மதிப்பு 4.30 லட்சம்.