/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இளைஞரின் உடல் உறுப்பால் ஏழு பேருக்கு மறுவாழ்வு
/
இளைஞரின் உடல் உறுப்பால் ஏழு பேருக்கு மறுவாழ்வு
ADDED : செப் 19, 2024 12:47 AM
சென்னை, திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டையைச் சேர்ந்தவர் சுரேஷ், 18; ஜவுளி நிறுவன ஊழியர். இவர் 15ம் தேதி ஆந்திர மாநிலம், நகரியில் நடந்த சாலை விபத்தில் சிக்கினார்.
இதில், பலத்த காயமடைந்தவர், திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு, நேற்று முன்தினம் மூளைச்சாவு அடைந்தார். சுரேஷின் உடல் உறுப்புகளை தானமளிக்க, பெற்றோர் விருப்பம் தெரிவித்தனர்.
அதன்படி, இதயம், இதய வால்வு, நுரையீரல், இரு சிறுநீரகங்கள், கால் எலும்பு, கல்லீரல், விழி வெண்படலம் ஆகியவை தானமாக பெறப்பட்டன.
இதயம், கால் எலும்பு, ஒரு சிறுநீரகம் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளுக்கு பயன்படுத்தப்பட்டது. மற்ற உறுப்புகள், தகுதி அடிப்படையில் மற்ற மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டன.
இதற்கிடையே, உடல் உறுப்புகளை தானம் அளித்த சுரேஷின் உடலுக்கு, மருத்துவமனை முதல்வர் தேரணிராஜன் உட்பட டாக்டர்கள், நர்ஸ்கள் அணிவகுப்பு மரியாதை செலுத்தினர்.