UPDATED : நவ 03, 2026 12:00 AM
ADDED : நவ 02, 2026 11:37 PM
சென்னை: விதிகளை மீறி ஏழு இடங்களில் வைக்கப்பட்டிருந்த, பிரமாண்ட பேனர்களை, மாநகராட்சி அதிகாரிகள் நேற்று அகற்றினர்.
சென்னையில் சட்ட விரோதமாக விளம்பர பேனர்கள், பலமான அஸ்திவாரம் இன்றி அமைக்கப்படுவதால், விபத்து அபாயம் உள்ளது குறித்து நேற்று, நம் நாளிதழில் விரிவான செய்தி வெளியானது.
இதையடுத்து, தேனாம்பேட்டை பகுதிகளில், மாநகராட்சி மண்டல அலுவலர்கள் பேனர் குறித்து ஆய்வு நடத்தினர். அனுமதிக்கப்பட்டதை விட, கூடுதலாக அமைக்கப்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து, ஏழு இடங்களில் இருந்த சட்ட விரோத பேனர்களை, மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.
இதுகுறித்து, தேனாம்பேட்டை மண்டல அதிகாரியிடம் கேட்டபோது, ‘அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை அகற்றி வருகிறோம். அனுமதி பெற்ற அளவைவிட, உயரமாகவும், அகலமாகவும் அமைக்கப்பட்ட பேனர்களின் அளவுகளை சரி செய்ய உத்தரவிட்டு, அபராதம் விதிக்கப்பட்டும் வருகிறது’ என்றனர்.
