/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நுாற்றாண்டு பூங்கா மீண்டும் திறப்பு
/
நுாற்றாண்டு பூங்கா மீண்டும் திறப்பு
ADDED : அக் 19, 2024 12:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, கதீட்ரல் சாலையிலுள்ள கலைஞர் நுாற்றாண்டு பூங்கா, மழையின் காரணமாக, 15ம் தேதி முதல் நேற்று வரை விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இன்று முதல் பூங்கா வழக்கம்போல் செயல்படும்.
கூட்ட நெரிசலை தவிர்க்க, https://tnhorticulture.in/kcpetickets என்ற இணையதளம் வாயிலாக பூங்காவிற்கான நுழைவுசீட்டு பெறலாம்.
இதில், பறவையகம், ஜிப்லைனிற்கு மாலை 4:00 மணி வரை மட்டுமே நுழைவு சீட்டு வழங்கப்படும். இசை நீருற்றுக்கு ஒரு நாளைக்கு 320 பேருக்கு நுழைவுச்சீட்டு வழங்கப்படுவதால், மாலை 4:00 முதல் இணையதளத்தில் வழங்கப்படும்.
பொது நுழைவு சீட்டு, மாலை 6:00 மணி வரை வழங்கப்படும் என, தோட்டக்கலைத்துறை தெரிவித்துள்ளது.

