/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மணலிபுதுநகர் வரை மெட்ரோ ரயில் சேவையை நீட்டிக்க கோரிக்கை
/
மணலிபுதுநகர் வரை மெட்ரோ ரயில் சேவையை நீட்டிக்க கோரிக்கை
மணலிபுதுநகர் வரை மெட்ரோ ரயில் சேவையை நீட்டிக்க கோரிக்கை
மணலிபுதுநகர் வரை மெட்ரோ ரயில் சேவையை நீட்டிக்க கோரிக்கை
ADDED : மார் 04, 2024 01:06 AM

மணலிபுதுநகர்:மணலிபுதுநகர் வரை, மெட்ரோ ரயில் சேவையை நீட்டிக்க கோரிக்கை எழுந்துள்ளது.
சென்னை, மணலிபுதுநகர், சடையங்குப்பம் - பர்மா நகர் சுற்றுவட்டார பகுதிகளில், ஒரு லட்சத்திற்கும் அதி கமான மக்கள் வசிக்கின்றனர்.
இப்பகுதியைச் சேர்ந்த மக்கள், விம்கோ நகர் மெட்ரோ ரயில் சேவையை பெற வேண்டுமெனில், மாநகரப் பேருந்தில், 8 கி.மீ., துாரம் பயணித்து வர வேண்டியுள்ளது. தவிர, திருவொற்றியூருக்கு செல்லவேண்டுமாயின், 5 கி.மீ., துாரம் பயணிக்க வேண்டியுள்ளது.
எனவே, மணலிபுதுநகர் வரை மெட்ரோ ரயில் சேவையை நீட்டிக்க வேண்டும் ; மணலிபுதுநகர் - சடையங் குப்பம் - ஜோதி நகர் மேம்பாலம் வழியாக இணைப்பு சாலையை ஏற்படுத்தவேண்டும்.
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மெட்ரோ ரயில் சேவை கோரிக்கை குழுவினர், 300 க்கும் மேற்பட்டோர் விழிப்புணர்வு நடைபயணம், நேற்று காலை, மேற்கொள்ளவிருந்தனர்.
தேர்தல் அறிவிக்கவிருக்கும் நிலையில், நடைபயணம் கூடாது என, போலீசாரால் அறிவுறுத்தப்பட்டது. அதை தொடர்ந்து, மணலிபுதுநகர் குடியிருப்போர் நல சங்கம் எதிரே, 3-00 க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி, மெட்ரோ ரயில் சேவையை வலியுறுத்தி, விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி நின்றனர்.
மேலும், ராட்சத துணியில் கையெழுத்திட்டும், தங்கள் கோரிக்களை வலியுறுத்தினர்.

