/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெண்ணிடம் வம்பிழுத்த வாலிபருக்கு 'காப்பு'
/
பெண்ணிடம் வம்பிழுத்த வாலிபருக்கு 'காப்பு'
ADDED : அக் 19, 2024 12:46 AM
சென்னை, இளம்பெண்ணிடம் தகாத முறையில் நடந்தது மட்டுமின்றி, கொலை மிரட்டல் விடுத்த நபரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.
ஆயிரம்விளக்கு காவல் நிலையத்தில், கடந்த 16ம் தேதி, 23 வயது இளம்பெண் புகார் ஒன்றை அளித்து இருந்தார்.
அதில், ஆயிரம் விளக்கு ரங்கூன் தெருவைச் சேர்ந்த ஹரிபிரசாத், 29, என்பவர், நான் வேலைக்கு போகும் போதும் வரும் போதும், கேலி கிண்டல் செய்வது மட்டுமின்றி, ஆபாச வார்த்தைகளால் குறுஞ்செய்தி அனுப்பி வருகிறார்.
கடந்த 16ம் தேதி வேலை முடித்து வீட்டிற்கு ரங்கூன் தெரு - பத்திரி தெரு சந்திப்பில் நடந்து சென்ற போது, ஹரிபிரசாத் என் ஆடையை பிடித்து இழுத்து தகராறு செய்தார்.
மேலும் அவரை தவிர யாரையும் திருமணம் செய்யக் கூடாது. மீறினால் கொலை செய்து விடுவேன் என, பகிரங்கமாக மிரட்டினார்.
அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.
புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த ஆயிரம்விளக்கு போலீசார், நேற்று ஹரிபிரசாத்தை கைது செய்தனர்.
இருவரும் ஏற்கனவே காதலித்து வந்த நிலையில், தகராறு ஏற்பட்டதை தொடர்ந்து,'இனி பேசிக் கொள்ள மாட்டோம்' என, ஆயிரம்விளக்கு காவல் நிலையத்தில் எழுதிக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.