ADDED : பிப் 15, 2024 12:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை 'மனிதம் போற்றுவோம்' என்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, 2011 ஏப்., 21ல், சென்னை காவல் துறையில், 'காவல் கரங்கள்' உதவி மையம் துவக்கப்பட்டது.
இதுவரை காவல் கரங்கள் உதவி மையம் வாயிலாக, 6,178 வீடற்ற ஆதரவற்றவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
இதில், 4,427 பேர் காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், 960 பேர் அவர்களது குடும்பத்துடன் சேர்த்து வைக்கப்பட்டுள்ளனர். 587 பேர் மனநல மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அதுமட்டுமின்றி, உரிமை கோரப்படாத, 3,205 இறந்த அனாதை உடல்கள், தன்னார்வலர்களின் உதவியுடன் உரிய முறையில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன.

