ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஹர்மந்தர் சிங் நுால் வெளியீடு
ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஹர்மந்தர் சிங் நுால் வெளியீடு
ADDED : நவ 14, 2026 06:12 PM
சென்னை: ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஹர்மந்தர் சிங் எழுதிய நுால், தி.நகரில் வெளியிடப்பட்டது.
ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஹர்மந்தர் சிங், தன் 35 ஆண்டு கால பொது வாழ்க்கை மற்றும் நிர்வாக அனுபவங்களை அடிப்படையாக வைத்து எழுதிய, ‘ஒன் நாட்ச் பெட்டர்’ என்ற நுால், தி.நகரில் நேற்று (நவ.,13) வெளியிடப்பட்டது.
நுாலின் முதல் பிரதியை, சபாநாயகர் பிரபாகர் வெளியிட, சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி டாக்டர் ஜோதிமணி பெற்றுக்கொண்டார்.
சபாநாயகர் பிரபாகர் பேசியதாவது:
தமிழகத்தில், ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக முத்திரை பதித்தவர் ஹர்மந்தர் சிங். அவரது பணி அனுபவங்களும், நினைவுகளும், அரசுக்கு தேவையானவை.
இதுபோன்ற நுால்களை எழுதுவது தங்களை பெருமைப்படுத்திக் கொள்வதற்காக அல்ல. தங்களது அனுபவங்களையும், பணிக்காலத்தில் கற்றுக் கொண்ட பாடங்களையும் அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்லவே.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னாள் நீதிபதி டாக்டர் ஜோதிமணி பேசுகையில், ‘‘இயற்கை பாதுகாப்பு மற்றும் நிலக்கரி மேலாண்மை திட்டம் உள்ளிட்டவற்றில் சிறப்பாக செயல்பட்டவர், ஹர்மந்தர் சிங். அரசுத் துறையில் பணியாற்றுவோருக்கு, இந்நுால் சிறந்த வழிகாட்டியாக இருக்கும்,’’ என்றார்.
