/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட விவகாரம் விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி நியமனம்

ADDED : செப் 03, 2025 10:01 AM
சென்னை: சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை முன், போராட்டத்தில் ஈடுபட்ட துாய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக, சில வழக்கறிஞர்களும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
துாய்மை பணியாளர்கள் கைதின்போது, வழக்கறிஞர்களும் கைது செய்யப்பட்டதுடன், தாக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த வழக்கறிஞர்கள், சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டதாகவும், அவர்களை விடுவிக்கக்கோரியும், உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் விஜய், ஆட் கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
வழக்கு விசாரணையின்போது, துாய்மை பணியாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக செயல்பட்ட வழக்கறிஞர்களை, போலீசார் கடுமையாக தாக்கியதாகவும், பெண் வழக்கறிஞர்களிடம் போலீசார் அத்துமீறி நடந்து கொண்டதாகவும், மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், லட்சுமி நாராயணன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், 'வழக்கறிஞர்களை போலீசார் தாக்கியது தொடர்பாக விசாரணை நடத்த, ஓய்வு பெற்ற நீதிபதி பார்த்திபன் நியமிக்கப்படுகிறார். இவர், வழக்கு விசாரணையை விரைந்து முடித்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.