ADDED : ஜூன் 23, 2025 01:46 AM
சென்னை:சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை:
சென்னை மாநகராட்சியால் 418.56 கி.மீ., நீளமுடைய, 488 பேருந்து தட சாலைகள் மற்றும் 5,653.44 கி.மீ., நீளமுடைய 35,978 உட்புற சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.
கடந்த நான்காண்டுகளில் பல்வேறு திட்ட நிதிகளின் கீழ், 266 கி.மீ., நீளத்திற்கு, 375 பேருந்து சாலைகள், 2,170 கி.மீ., நீளத்திற்கு, 13,909 உட்புற சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிதியாண்டு 2025 - 26ல் மொத்தம், 489.22 கோடி ரூபாய் மதிப்பில், 650.90 கி.மீ., நீளத்திற்கு, 3,987 சாலைகள் அமைக்கப்பட உள்ளன.
இதில், 393.22 கோடி ரூபாய் மதிப்பிலான, 3,642 சாலை பணிகளுக்கு ஒப்பந்தம் விடப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.
மேலும், 96 கோடி ரூபாய் மதிப்பில், 89.40 கி.மீ., நீளத்திற்கு, 345 எண்ணிக்கையிலான பேருந்து சாலை பணிகளுக்கு விரைவில் ஒப்பந்த நடவடிக்கைகள் துவங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

