/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
டிக்கெட் எடுத்து தருவதாக கூறி வழிப்பறி
/
டிக்கெட் எடுத்து தருவதாக கூறி வழிப்பறி
ADDED : அக் 10, 2024 12:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரம்பூர்,பீஹாரை சேர்ந்தவர் நரேத்நந்தன் திவாரி, 25. இவர் காரைக்காலில் கார் ஷீட் கவர் செய்யும் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார்.
சொந்த ஊருக்கு செல்ல நேற்று காலை பெரம்பூர் ரயில் நிலையம் வந்த இவரிடம் இரு மர்மநபர்கள், முன்பதிவு டிக்கெட் எடுத்து தருவதாக கூறியுள்ளனர்.
பாரதி சாலைமாநகராட்சி பூங்காவுக்கு திவாரியை அழைத்துச் சென்று, அவரிடமிருந்து இரண்டு மொபைல் போன்கள் மற்றும் நான்கு ஏ.டி.எம்., வங்கி அட்டை உள்ளிட்டவற்றை பறித்துச் சென்றனர்.