UPDATED : நவ 07, 2026 03:35 PM
ADDED : நவ 07, 2026 03:32 PM

எஸ்பிளனேடு: ஆட்டோ ஓட்டுநரை தாக்கி பணம் பறித்த வழக்கில், ரவுடியாக வலம் வரும் கோபி, 27 என்பவரை, போலீசார் கைது செய்தனர்.
பிராட்வே பகுதியைச் சேர்ந்தவர் பழனி, 35; ஆட்டோ ஓட்டுநர். கடந்த 3ம் தேதி, பாரிமுனை, என்.எஸ்.சி., போஸ் சாலையில் சவாரிக்காக காத்திருந்தார். அப்போது, மர்ம நபர் ஒருவர் பழனியிடம், 200 ரூபாய் கேட்டுள்ளார்.
அதற்கு பழனி, ‘பணம் இல்லைʼ எனக் கூறியுள்ளார். உடனே, அவரது கன்னத்தில் அறைந்த மர்ம நபர், பாக்கெட்டில் வைத்திருந்த, 200 ரூபாயை எடுத்துக்கொண்டு, போலீசில் சொன்னால் கொலை செய்துவிடுவதாக மிரட்டி சென்றார்.
இது குறித்து எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசாரின் விசாரணையில், சோழிங்கநல்லுார், எழில் நகரைச் சேர்ந்த கோபி, 27, என்பவர், பணம் பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது. இவர் மீது கொலை, கொலை முயற்சி, வழிப்பறி உட்பட, ஏற்கனவே 22 வழக்குகள் உள்ளன.
அவரை, போலீசார் நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
