/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கொலை முயற்சி ரவுடிக்கு 7 ஆண்டு சிறை
/
கொலை முயற்சி ரவுடிக்கு 7 ஆண்டு சிறை
ADDED : அக் 15, 2025 02:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பூந்தமல்லி: போரூர், காரம்பாக்கம் பகுதியை சேர்ந்த ரவுடியான அஸ்வந்த், 30, என்பவர் கடந்த 2022ம் ஆண்டு, வளசரவாக்கத்தை சேர்ந்த சண்முகசுந்தரம், 49, என்பவருடன் தகராறில் ஈடுபட்டு, சரமாரியாக தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
இந்த வழக்கில், வளசரவாக்கம் போலீசார் அஸ்வந்த்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு, பூந்தமல்லி உதவி அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இதில், அஸ்வந்த் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு, 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், 30,000 ரூபாய் அபராதமும் விதித்து, நேற்று முன்தினம் நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.