/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கேளம்பாக்கத்தில் 36 மாடி குடியிருப்பு 'ராயல் லேண்ட்' நிறுவனம் கட்டுகிறது
/
கேளம்பாக்கத்தில் 36 மாடி குடியிருப்பு 'ராயல் லேண்ட்' நிறுவனம் கட்டுகிறது
கேளம்பாக்கத்தில் 36 மாடி குடியிருப்பு 'ராயல் லேண்ட்' நிறுவனம் கட்டுகிறது
கேளம்பாக்கத்தில் 36 மாடி குடியிருப்பு 'ராயல் லேண்ட்' நிறுவனம் கட்டுகிறது
ADDED : ஏப் 27, 2025 03:15 AM

சென்னை:சென்னையில், ஐந்து முதல் எட்டு மாடி வரையிலான குடியிருப்புகள் பரவலாக வரும் நிலையில், அதிக உயரமான கட்டடங்கள் வருவது குறைந்துள்ளது.
விமான போக்குவரத்து துறை அனுமதி தொடர்பான பிரச்னை காரணமாக, பல்வேறு கட்டுமான நிறுவனங்கள், இதில் ஆர்வம் காட்டாமல் இருந்து வந்தன.
இந்நிலையில், குறிப்பிட்ட சில கட்டுமான நிறுவனங்கள் சார்பில், பழைய மாமல்லபுரம் சாலையில், கழிபட்டூர் உள்ளிட்ட பகுதிகளில், 30 முதல் 40 மாடி வரையிலான குடியிருப்பு கட்டடங்கள் கட்டப்பட்டு உள்ளன.
சென்னை விமான நிலையம், தாம்பரம் விமான படை தளம் ஆகியவற்றின் எல்லைக்கு வெளியில், அதிக உயரமான கட்டடங்களை கட்டுவதில் எவ்வித தடையும் இல்லை.
குறிப்பாக, போதிய அகலம் உள்ள சாலையாக இருந்தால், அப்பகுதியில் உயரமான கட்டடங்களை அனுமதிக்க, விதிகளில் வழி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த வகையில், வண்டலுார் - கேளம்பாக்கம் சாலை, பழைய மாமல்லபுரம் சாலை சந்திப்பில், 200 அடி சாலையை ஒட்டிய நிலத்தில், 36 மாடி குடியிருப்பு கட்ட, சென்னையைச் சேர்ந்த, 'ராயல் லேண்ட் டெவலப்பர்' நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இத்திட்டத்துக்காக, நகர், ஊரமைப்பு துறையான டி.டி.சி.பி., ஒப்புதல், ரியல் எஸ்டேட் ஆணையத்தில் பதிவு தொடர்பான நடைமுறைகளில், சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இங்கு, நான்கு பிரிவாக, இந்த கட்டடம் கட்டப்பட உள்ளது.
இதில், 1,039 சதுர அடி முதல், 1,500 சதுர அடி வரை, இரண்டு மற்றும் மூன்று படுக்கை வசதியில், வீடுகள் கட்டப்பட உள்ளன. கேளம்பாக்கம் பகுதியில் அதிக உயரம் உடைய கட்டடமாக இது அமையும் என கூறப்படுகிறது.
இத்திட்டத்தில், வீடுகள் விற்பனை தொடர்பான முறையான அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளதாக, ராயல் லேண்ட் டெவலப்பர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

