/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ராயபுரம் சார் -- பதிவாளர் அலுவலகம் இடமாற்றப்படுமா?
/
ராயபுரம் சார் -- பதிவாளர் அலுவலகம் இடமாற்றப்படுமா?
ராயபுரம் சார் -- பதிவாளர் அலுவலகம் இடமாற்றப்படுமா?
ராயபுரம் சார் -- பதிவாளர் அலுவலகம் இடமாற்றப்படுமா?
ADDED : நவ 05, 2025 02:50 AM
வண்ணாரப்பேட்டை அடிப்படை வசதிகளின்றி, மாதம் 65,000 ரூபாய் செலவில் வாடகை கட்டடத்தில் செயல்படும் ராயபுரம் சார் - பதிவாளர் அலுவலகத்தை, சொந்த கட்டடத்தில் இடமாற்ற வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.
வண்ணாரப்பேட்டை - திருவொற்றியூர் நெடுஞ்சாலையில், ராயபுரம் சார் - பதிவாளர் அலுவலகம் வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. மாதம் 65,000 ரூபாய் வாடகை செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால், குடிநீர், கழிப்பறை, போதிய நாற்காலி உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லை.
இங்கு பத்திர பதிவுக்காக தினமும் 500க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். அவர்கள் கால்கடுக்க காத்திருக்கும் அவல நிலை நீடிக்கிறது.
அதுமட்டுமல்லாமல், முதல் மாடியில் அலுவலகம் இயங்குவதால் மாற்றுத்திறனாளிகள், வயதானோர் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர்.
எனவே, ராயபுரம் சார் - பதிவாளர் அலுவலகத்தை, சில மாதங்களுக்கு முன் திறக்கப்பட்ட பிராட்வே, ராஜாஜி சாலையில் உள்ள பதிவுத் துறை அலுவலகத்தில், இடமாற்றம் செய்ய வேண்டும் என, வழக்கறிஞர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

