/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
எழும்பூர் ரயில் நிலையத்தில் ஆர்.பி.எப்., வீரர்கள் சோதனை
/
எழும்பூர் ரயில் நிலையத்தில் ஆர்.பி.எப்., வீரர்கள் சோதனை
எழும்பூர் ரயில் நிலையத்தில் ஆர்.பி.எப்., வீரர்கள் சோதனை
எழும்பூர் ரயில் நிலையத்தில் ஆர்.பி.எப்., வீரர்கள் சோதனை
ADDED : ஏப் 30, 2025 12:47 AM

சென்னை, திருவாலங்காடு, அம்பத்துார் பகுதிகளில் மர்ம நபர்கள் சதி வேலையில் ஈடுபட்டதை அடுத்து, எழும்பூர் ரயில் நிலையத்தை சில தினங்களுக்கு முன், திருவாலங்காடு ரயில் நிலையம் அருகே, போல்டு மற்றும் நட்டுகள் நீக்கப்பட்டு, ரயில் விபத்தை ஏற்படுத்த மர்ம நபர்கள் முயற்சித்தனர்.
அம்பத்துார் பட்டரைவாக்கம், அரக்கோணத்திலும் தண்டவாள இணைப்பு பகுதியில் கற்கள், கம்பிகளை போட்டு, சிக்னல் செயல்பாடு தடுக்கும் செயல் நடந்தது.
இதையடுத்து, கண்காணிப்பை தீவிரப்படுத்த, ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இதன்படி, எழும்பூர் ரயில்வே பாதுகாப் படை இன்ஸ்பெக்டர் ஜெபாஸ்டியன் தலைமையில், ரயில்வே பாதுகாப்பு படையினர், மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவினரின் உதவியுடன், எழும்பூர் ரயில் நிலையத்தில் நேற்று சோதனை நடத்தினர்.
ரயில் நிலைய வளாகம், காத்திருப்போர் அறை, டிக்கெட் எடுக்கும் இடம், நடை மேம்பாலம் மற்றும் ரயில்வே பாதையிலும், ரோந்து சென்று சோதனை நடந்தது.
இதற்கிடையே, தண்டவாளத்தில் பயணம் செய்தல், ஓடும் ரயில்கள் மற்றும் பாதையில் ஆபத்தமான முறையில் 'செல்பி' எடுப்பதை தவிர்க்க வேண்டும். பாதுகாப்பு மற்றும் உதவிக்காக 139 என்ற தொலைபேசி எண்ணை பயன்படுத்தலாம் என, பயணியருக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டன.