தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ரூ.1.13 கோடி பறிமுதல் 3 பேர் கைது

 ரூ.1.13 கோடி பறிமுதல் 3 பேர் கைது

 ரூ.1.13 கோடி பறிமுதல் 3 பேர் கைது


ADDED : ஆக 03, 2026 02:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 03, 2026 02:29 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

செங்குன்றம்: ஆந்திராவில் இருந்து உரிய ஆவணங்களின்றி லாரியில் எடுத்து வரப்பட்ட, 1.13 கோடி ரூபாயை பறிமுதல் செய்த போலீசார், லாரி ஓட்டுநர் உட்பட மூன்று பேரை கைது செய்தனர்.

செங்குன்றம், மொண்டியம்மன் நகர் சோதனைச் சாவடியில், செங்குன்றம் போலீசார் நேற்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, ஆந்திர பதிவெண் கொண்ட ஐச்சர் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், உரிய ஆவணங்களின்றி, 1.13 கோடி ரூபாய் எடுத்து சென்றது தெரிந்தது.

விசாரணையில், தங்க நகை வாங்குவதற்காக, சென்னைக்கு எடுத்து செல்வதாக தெரிவித்தனர். அதில் இருந்த ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் ராம்பாபு, 42, பிரவீன், 36, பவன் குமார், 28, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

பணம், மூன்று மொபைல் போன்கள் மற்றும் லாரி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us