தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ புவிசார் தரவுகளை மேம்படுத்த ரூ.4.34 கோடி

புவிசார் தரவுகளை மேம்படுத்த ரூ.4.34 கோடி

புவிசார் தரவுகளை மேம்படுத்த ரூ.4.34 கோடி


ADDED : செப் 28, 2026 10:54 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 28, 2026 10:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: சென்னை மாநகராட்சியில் புவிசார் தரவுகளை மேம்படுத்த, நடப்பு ஆண்டில், 4.34 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகள், வணிக நிறுவனங்களை, ‘ட்ரோன்’ மற்றும் செயற்கைக்கோள் மூலம் அளவிடும் பணி, 2022 – 23 நிதியாண்டில் தொடங்கப்பட்டது.

தமிழக புத்தாக்க முயற்சிகள் திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்பட்ட இந்த நடைமுறை வாயிலாக, வரி முரண்பாடுகளை களைவதுடன், வெள்ள அபாயம், போக்குவரத்து நெரிசல், அவசர கால சூழ்நிலைகளையும் கண்காணிக்க முடியும்.

நடப்பாண்டில் இந்த பணிக்காக, 4.34 கோடி ரூபாயை ஒதுக்கி, நகராட்சி நிர்வாகத்துறை உத்தரவிட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us