/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.90,000 நுாதன மோசடி முகநுால் தம்பதிக்கு வலை
/
ரூ.90,000 நுாதன மோசடி முகநுால் தம்பதிக்கு வலை
ADDED : மார் 01, 2024 12:27 AM
திரு.வி.க., நகர், திரு.வி.க., நகர் அன்பழகன் நகரைச் சேர்ந்தவர் கிருத்திகா, 33; ஐ.டி., நிறுவன ஊழியர்.
கடந்த 2022 மார்ச் மாதம், முகநுால் வாயிலாக அபிநயா மற்றும் அவரது கணவர் பிரபின் கிறிஸ்டல் ராஜ் ஆகியோர் பழக்கமாகி உள்ளனர். கிருத்திகா இவர்களிடம் தன் குடும்ப பிரச்னைகளையும் பகிர்ந்துள்ளார்.
அவர்கள், கிருத்திகா மீது அக்கறை காட்டுவது போல, பிரச்னையை தீர்க்க நல்ல வழக்கறிஞரை அறிமுகம் செய்து வைப்பதாகக் கூறி, ஆன்லைனில் 90,000 ரூபாய் வாங்கியுள்ளனர்.
ஆனால், அவர்கள் கூறியபடி வழக்கறிஞர் யாரையும் அறிமுகப்படுத்தவில்லை. கொடுத்த பணத்தை கேட்ட போது, மிரட்டல் விடுத்து உள்ளனர்.
இதையடுத்து இருவர் மீதும், திரு.வி.க., நகர் காவல் நிலையத்தில் கிருத்திகா புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிந்து, முகநுால்தம்பதியை தேடி வருகின்றனர்.

