ADDED : மார் 08, 2024 12:33 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பிரம்ம குமாரிகள் அமைப்பு சார்பில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு, பூந்தமல்லியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சகஸ்ர கோடி லிங்க தரிசனம் நேற்று துவங்கியது.
ஒரு லிங்கம் கண்ணாடியில் பிரதிபலித்து கோடி லிங்கமாக காட்சியளிப்பதை, பக்தர்கள் பலர் ஆர்வத்துடன் வழிபட்டு சென்றனர். ஞாயிறு வரை லிங்க தரிசனம் நடைபெறுகிறது. காலை 8:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை பொதுமக்கள் இலவசமாக தரிசனம் செய்யலாம் என, பிரம்ம குமாரிகள் அமைப்பினர் தெரிவித்தனர்.

