தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மாணவியிடம் செயின் பறித்த 'சேல்ஸ்மேன்' சிக்கினார்

மாணவியிடம் செயின் பறித்த 'சேல்ஸ்மேன்' சிக்கினார்

மாணவியிடம் செயின் பறித்த 'சேல்ஸ்மேன்' சிக்கினார்


UPDATED : ஜூலை 01, 2026 06:09 PM

ADDED : ஜூலை 01, 2026 05:12 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 01, 2026 06:09 PM ADDED : ஜூலை 01, 2026 05:12 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

டி.பி.: தாயுடன் இருசக்கர வாகனத்தில் ஹோட்டலுக்கு சென்ற, 15 வயது பள்ளி மாணவியின் கழுத்தில் இருந்த ஒன்றரை சவரன் தங்கச் செயினை பறித்து தப்பிய 'சேல்ஸ்மேனை' போலீசார் கைது செய்தனர்.

அண்ணா நகர் கிழக்கு, பள்ளியரசன் தெருவை சேர்ந்த மலர்விழி, 40. இவர், கடந்த ஜூன் 24ம் தேதி இரவு தன் 10ம் வகுப்பு படிக்கும் மகளுடன் இருசக்கர வாகனத்தில் கெனால் சாலையில் ஹோட்டலுக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது, பின்னால் 'பல்சர்' இருசக்கர வாகனத்தில் வந்த நபர், பைக்கில் பின்புறம் அமர்ந்திருந்த மாணவியின் கழுத்தில் அணிந்திருந்த ஒன்றரை சவரன் தங்கச் செயினை பறித்து தப்பினார்.

புகாரின்படி டி.பி.,சத்திரம் போலீசார் விசாரித்து, செயின் பறிப்பில் ஈடுபட்ட புளியந்தோப்பு, சாஸ்திரி நகரை சேர்ந்த சரவணன், 24 என்பவரை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.

விசாரணையில், சரவணன் ஒரு துணிக்கடையில் சேல்ஸ்மேனாக வேலை செய்வது தெரிந்தது. அவரிடமிருந்து ஒன்றரை சவரன் தங்கச் செயினை மீட்டு, 'பல்சர்' வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us