UPDATED : ஜூலை 01, 2026 06:11 PM
ADDED : ஜூலை 01, 2026 05:12 PM
சென்னை: சென்னையில் வெவ்வேறு இடங்களில் குட்கா புகையிலைப் பொருட்கள் வைத்திருந்த, 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
தேனாம்பேட்டை போலீசார் காலை, சுப்புராயர் நகர், இளங்கோ சாலை சந்திப்பு அருகே கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் தடைசெய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருட்கள் மூட்டையில் இருந்தது தெரியவந்தது.
தொடர்ந்து குட்கா புகையிலை கடத்தலில் ஈடுபட்ட, துாத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சகாயவசந்தன், 29, அமைந்தகரையைச் சேர்ந்த உதயகுமார், 32 ஆகிய இருவரை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து, 88 கிலோ எடையிலான குட்கா புகையிலைப் பொருட்கள், 2 மொபைல்போன், கார் மற்றும் இருசக்கர வாகனம் தலா ஒன்றை பறிமுதல் செய்தனர்.
அதேபோல், அண்ணாநகரில் மாவா தயாரித்து விற்று வந்த தர்மராஜ், 50 என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து, 73 கிலோ மாவா, கிரைண்டர் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
