/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
துாய்மை பணியாளர்கள் சுடுகாட்டில் போராட்டம்
/
துாய்மை பணியாளர்கள் சுடுகாட்டில் போராட்டம்
UPDATED : ஜன 04, 2026 06:27 AM
ADDED : ஜன 04, 2026 05:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வண்ணாரப்பேட்டை: துாய்மை பணியை தனியார் நிறுவனங்களிடம் வழங்கியதை கண்டித்தும், மாநகராட்சியின் கீழ் பணி வழங்கக்கோரியும், துாய்மை பணியாளர்கள், பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
வண்ணாரப்பேட்டை, மூலக்கொத்தளம் சுடுகாட்டில், நேற்று காலை 400க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள் திரண்டனர். எரியூட்டுமிடத்தில் படுத்தும், கையில் மண்டை ஓடை ஏந்தியும், ஒப்பாரி வைத்தும் நுாதன போராட்டம் நடத்தினர்.
அவர்களை கைது செய்த போலீசார், 15க்கும் மேற்பட்ட வாகனத்தில் ஏற்றி, கோயம்பேடு, அமைந்தகரை, சூளை போன்ற பகுதிகளில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்து, மாலையில் விடுவித்தனர்.

