ADDED : ஆக 16, 2025 03:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்குன்றம்: டாஸ்மாக் விடுமுறை தினமான நேற்று, செங்குன்றம், விளாங்காட்டுபாக்கம் சுற்றுவட்டாரங்களில், கள்ளச்சந்தையில் மது விற்பனை அமோகமாக இருந்தது.
முன்தினமே வாங்கி இருப்பு வைக்கப்பட்ட குவார்ட்டர் பாட்டில்கள் குறித்து, வாட்ஸாப் மூலம் நண்பர்களுக்கு தகவல் பகிர்ந்து, மது வகைகள் விற்கப்பட்டன. வகையில், 150 முதல் 250 ரூபாய் வரையிலான குவார்ட்டர் மது வகைகள், 300 முதல் 400 ரூபாய் வரை விற்கப்பட்டன.

