/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தெரு நாய் கடித்து கடைக்காரர் படுகாயம்
/
தெரு நாய் கடித்து கடைக்காரர் படுகாயம்
ADDED : ஆக 25, 2025 05:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவேற்காடு: அம்பத்துார், வெங்கடாபுரத்தைச் சேர்ந்தவர் வடிவேலு, 43. திருவேற்காடு, ஈஸ்வரன் நகர் ஆறாவது தெருவில் 'அன்னை சிக்கன் ஸ்டால்' என்ற பெயரில், இறைச்சி கடை நடத்தி வருகிறார்.
நேற்று காலை, கடைக்கு காபி வாங்க, தன் 'ஹீரோ பேஷன் ப்ரோ' இருசக்கர வாகனத்தை இயக்கினார். அப்போது, துாரத்தில் நின்றிருந்த தெரு நாய், திடீரென ஓடி வந்து வடிவேலுவின் இடது காலில் கடித்தது. அக்கம்பக்கத்தினர் நாயை விரட்டி அவரை மீட்டு, ஆவடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.