தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/கிண்டி அடுக்குமாடி தொழில் வளாகத்தை விற்பனைக்கு வழங்க ‘சிட்கோ’ முடிவு

கிண்டி அடுக்குமாடி தொழில் வளாகத்தை விற்பனைக்கு வழங்க ‘சிட்கோ’ முடிவு

கிண்டி அடுக்குமாடி தொழில் வளாகத்தை விற்பனைக்கு வழங்க ‘சிட்கோ’ முடிவு


UPDATED : அக் 22, 2026 08:41 PM

ADDED : அக் 22, 2026 08:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 22, 2026 08:41 PM ADDED : அக் 22, 2026 08:36 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: கிண்டி அடுக்குமாடி தொழில் வளாகம் திறந்து இரண்டரை ஆண்டுகள் ஆகியும், தொழில் தொடங்க தொழில் முனைவோர் முன்வராததால், குத்தகையில் உள்ள இடத்தை விற்பனையாகவும் வழங்க, ‘சிட்கோ’ எனும், சிறு தொழில் வளர்ச்சி கழகம் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

கிண்டி சிட்கோ வளாகம், 407 ஏக்கர் பரப்பு உடையது. இங்கு சிறு, குறு தொழில் நிறுவனங்கள் உள்ளன. தொழில் தொடங்குவோரை ஊக்குவிக்க, 2 ஏக்கர் பரப்பில், 94.67 கோடி ரூபாயில் ஆறு மாடி உடைய தொழில் வளாகம் கட்டி, 2024 பிப்., மாதம் திறக்கப்பட்டது.

சதுர அடிக்கு, 8,000 ரூபாய் வீதம், 30 ஆண்டு குத்தகையில் வழங்க, சிட்கோ முடிவு செய்தது. ஆனால் இவ்வளவு தொகை கொடுத்து, குறுகிய கால குத்தகை எடுக்க, தொழில் முனைவோர் முன்வரவில்லை. இதனால், குத்தகை மற்றும் விற்பனை என்ற அடிப்படையில் வளாகங்களை வழங்க, சிட்கோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இது குறித்து, சிட்கோ அதிகாரிகள் கூறியதாவது:

பெரிய தொழில் நிறுவனங்கள் உள்ள சிப்காட் வளாகங்களில், குத்தகை அடிப்படையில் இடங்கள் வழங்கப்படும். சிறு, குறு தொழில்கள் தொடங்கும் பிரிவாக சிட்கோ உள்ளதால், இடம் மற்றும் கட்டடம் கட்டி விற்பனையாக வழங்கப்படும்.

குத்தகை என்றால், 99 ஆண்டுகள் வழங்க கேட்கின்றனர். கடந்த 2022ம் ஆண்டு, 30 ஆண்டாக குத்தகையை குறைத்து அரசு உத்தரவிட்டதால், தொழில் வளாகத்தை வாங்க, யாரும் முன்வரவில்லை.

இதனால் சதுர அடி பரப்பு விலையில் மாற்றம் செய்து, குத்தகை மற்றும் விற்பனை என்ற அடிப்படையில் வழங்க ஆலோசித்துள்ளோம். இதற்கான முடிவு, சிட்கோ ஆய்வு குழு கூட்டத்தில் எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us