/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'ஆன்லைன்' பங்குச்சந்தை மோசடியில் ஈடுபட்ட அக்கா, தம்பி கைது
/
'ஆன்லைன்' பங்குச்சந்தை மோசடியில் ஈடுபட்ட அக்கா, தம்பி கைது
'ஆன்லைன்' பங்குச்சந்தை மோசடியில் ஈடுபட்ட அக்கா, தம்பி கைது
'ஆன்லைன்' பங்குச்சந்தை மோசடியில் ஈடுபட்ட அக்கா, தம்பி கைது
ADDED : நவ 12, 2025 12:14 AM

ஆவடி: மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மோசடி கும்பலுக்கு வங்கி கணக்கு கொடுத்து, 'ஆன்லைன்' மோசடிக்கு உடந்தையாக செயல்பட்ட அக்கா, தம்பியை, தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கொரட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் சதிஷ், 46. இவரை தொடர்பு கொண்ட மர்ம நபர்கள், 'ஆன்லைன்' பங்கு சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஆசைக்காட்டி உள்ளனர்.
இவரிடம் இருந்து சிறுக சிறுக 28.19 லட்சம் ரூபாயை, வங்கி கணக்கு வாயிலாக பறித்துள்ளனர். தான் ஏமாற்றப் பட்டதை உணர்ந்த சதிஷ், இம்மாதம் 3ம் தேதி, ஆவடி மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார். விசாரித்த இன்ஸ்பெக்டர் சுதாகர் தலைமையிலான தனிப்படை போலீசார், சதிஷ் பணம் அனுப்பிய வங்கி கணக்கை ஆராய்ந்தனர்.
அந்த வங்கி கணக்கு, திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த, பி.இ., பட்டதாரியான யோகேஷ், 25, அவரது அக்கா ஹேமா ஸ்ரீ ரெட்டி, 29, என்பது தெரிந்தது. மோசடிக்கு உடந்தையாக வங்கி கணக்கு கொடுத்த இருவரையும், போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில், ஹேமாஸ்ரீ ரெட்டி, துபாயில் பணிபுரியும்போது, மோசடி நபர்களுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
பலரது பெயரில் போலி வங்கி கணக்கு துவங்கி, அதை ம.பி., மாநிலத்தில் உள்ள மோசடி கும்பலிடம் கொடுத்து, அக்கா, தம்பி கமிஷன் பெற்றதும் தெரிய வந்தது.
போலீசார், பூந்தமல்லி நீதிமன்றத்தில் இருவரையும் ஆஜர்படுத்தி, நேற்று முன்தினம் சிறையில் அடைத்தனர்.

