/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பணிகள் முடிந்தும் திறக்கப்படாத சோமசுந்தரம் விளையாட்டு திடல்
/
பணிகள் முடிந்தும் திறக்கப்படாத சோமசுந்தரம் விளையாட்டு திடல்
பணிகள் முடிந்தும் திறக்கப்படாத சோமசுந்தரம் விளையாட்டு திடல்
பணிகள் முடிந்தும் திறக்கப்படாத சோமசுந்தரம் விளையாட்டு திடல்
ADDED : மே 16, 2025 12:12 AM

தி.நகர் :தி.நகர் சோமசுந்தரம் மாநகராட்சி விளையாட்டு திடலில் சி.எம்.டி.ஏ., சார்பில் சீரமைப்பு பணிகள் முடிந்தும் திறக்கப்படாமல் உள்ளது.
கோடம்பாக்கம் மண்டலம், தி.நகர் 133வது வார்டில், பழமையான சோமசுந்தரம் விளையாட்டுத் திடல் அமைந்துள்ளது. இங்கு ஏராளமான இளைஞர்கள், பல்வேறு விளையாட்டு பயிற்சிகளை மேற்கொள்கின்றனர். முதியோர் உட்பட பலர் நடைபயிற்சியும் மேற்கொள்கின்றனர்.
இந்த விளையாட்டுத் திடலின் நுழைவாயில் மற்றும் சுற்றுச்சுவர் சேதமடைந்தும், போதிய பராமரிப்பு இன்றியும் அலங்கோலமாக காட்சியளித்தது. இதையடுத்து, 80 லட்சம் ரூபாய் செலவில் விளையாட்டு திடலை புதுப்பிக்கும் பணிகள், 2021ம் ஆண்டில் மாநகராட்சி சார்பில் துவக்கப்பட்டன.
இந்நிலையில், 2022 ம் ஆண்டு, தி.நகரில் மழை நீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட மண் மற்றும் சகதி, இந்த விளையாட்டுத் திடலில் குவிக்கப்பட்டன. இதற்கு அப்பகுதி இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், சி.எம்.டி.ஏ., சார்பில் மூன்று கோடி ரூபாய் செலவில், சோமசுந்தரம் விளையாட்டு திடல் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பணிகள் முடிந்த நிலையில், இன்னும் மாநகராட்சி விளையாட்டு திடல் திறக்கப்படவில்லை. இதையடுத்து, அப்பகுதி இளைஞர்கள் உள்ளே நுழைந்து விளையாடி வருகின்றனர். பணிகள் முடிந்த சோமசுந்தரம் விளையாட்டு திடலை முறையாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.