/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தென் மண்டல டேபிள் டென்னிஸ் தமிழக பல்கலைகள் அபாரம்
/
தென் மண்டல டேபிள் டென்னிஸ் தமிழக பல்கலைகள் அபாரம்
ADDED : ஜன 05, 2025 12:13 AM

சென்னை, தென் மண்டல டேபிள் டென்னிஸ் போட்டியில் ராமச்சந்திரா பல்கலை, பாரதியார் பல்கலை அணிகள் வெற்றி பெற்று, காலிறுதிக்கு தகுதி பெற்றன.
இந்திய பல்கலைக்கழங்களில் கூட்டமைப்பின் ஆதரவில், அமெட் பல்கலை சார்பில், தென் மண்டல அளவிலான மகளிர் டேபிள் டென்னிஸ் போட்டி, கானாத்துாரில் உள்ள பல்கலை வளாகத்தில் நடக்கிறது.
போட்டியில், தென் மண்டல அளவில் 80 பல்கலை அணிகள் பங்கேற்கின்றன.
நேற்று நடந்த காலிறுதிக்கு முந்தைய சுற்றில், கேரளா பல்கலை கழகம், 3 - 0 என்ற புள்ளி கணக்கில், கண்ணுார் பல்கலையையும், விக்ரம சிம்மபூரி பல்கலை, 3 - 0 என்ற புள்ளி கணக்கில் ஜவஹர்லால் நேரு டெக்னாலஜியையும், மதுரை காமராஜர் பல்கலை, 3 - 0 என்ற புள்ளி கணக்கில் விநாயகா மிஷன் ரிசர்ச் பவுண்டேஷன் பல்கலையையும் வீழ்த்தின.
மணிப்பால் அகடாமி எஜுகேஷன், 3 - 0 என்ற புள்ளி கணக்கில் கேரளா வேளாண் பல்கலையையும், -விஸ்வேஸ்வராய பல்கலை, 3 - 0 என்ற புள்ளி கணக்கில் பெங்களூரு செயின்ட் ஜோசப் பல்கலையையும் தோற்கடித்தன.
வெங்கடேஸ்வரா பல்கலை, 3 - 2 என்ற புள்ளி கணக்கில்- பாரதிதாசன் பல்கலையையும், பாரதியார் பல்கலை, 3 - 0 என்ற புள்ளி கணக்கில் -ஆந்திரா பல்கலையையும் தோற்கடித்து, வெற்றி பெற்றன.
ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலை, 3 - 1 என்ற புள்ளி கணக்கில்,- ஆச்சார்யா நாகார்ஜுனா பல்கலையை வீழத்தியது. போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.