/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.301 கோடியில் விளையாட்டு நகரம்: அரசாணை வௌியீடு
/
ரூ.301 கோடியில் விளையாட்டு நகரம்: அரசாணை வௌியீடு
ரூ.301 கோடியில் விளையாட்டு நகரம்: அரசாணை வௌியீடு
ரூ.301 கோடியில் விளையாட்டு நகரம்: அரசாணை வௌியீடு
ADDED : நவ 18, 2025 05:14 AM
சென்னை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், சென்னை அருகே உள்ள செம்மஞ்சேரியில், புதிய விளையாட்டு நகரம் அமைக்க, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சென்னையில், தேசிய அளவில் கால்பந்து, ஹாக்கி, கிரிக்கெட் போன்ற விளையாட்டு போட்டிகள் நடத்த, சிறப்பு மைதானங்கள் உள்ளன.
ஆனால் சர்வதேச அளவில், விளையாட்டுப் போட்டிகளை நடத்தவோ, பயிற்சிகள் மேற்கொள்ளவோ, தேவையான விளையாட்டு நகரங்கள் இல்லை. இது தொடர்பாக, கடந்த மார்ச் மாதம் எழுந்த கோரிக்கை அடிப்படையில், நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஓ.எம்.ஆர்., செம்மஞ்சேரியில், தனியார் ஆக்கிரமிப்பில் சர்வே எண் 12ல் இருந்த, 112 ஏக்கர் பரப்பளவு உடைய அரசு நிலம், இரண்டு ஆண்டுகளுக்கு முன் மீட்கப்பட்டது.
இந்த இடத்தை, சர்வதேச தரத்தில், மெகா விளையாட்டு நகரமாக அமைக்க, தமிழக அரசு முடிவு செய்தது.
இதற்காக, 112 ஏக்கர் நிலம், சில மாதங்களுக்கு முன், வருவாய் துறையிலிருந்து, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறைக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில், விளையாட்டு நகரம் தொடர்பான அரசாணையை, தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ளது.
அதில், விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், தமிழக அரசின் ஆதரவில், 301 கோடி ரூபாய் செலவில், கால்பந்து மைதானம், 'ரோலர் ஸ்கேட்டிங்' மைதானம், துப்பாக்கி சுடுதல் தளம், வில்வித்தை மைதானம் மற்றும் தடகள மைதானம் ஆகியவை, சர்வதேச தரத்தில் அமைக்கப்படும் என, அரசு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

