/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஒடிசா மாஸ்டர் பேட்மின்டன் தங்கம் ெவன்ற எஸ்.ஆர்.எம்., வீரர்
/
ஒடிசா மாஸ்டர் பேட்மின்டன் தங்கம் ெவன்ற எஸ்.ஆர்.எம்., வீரர்
ஒடிசா மாஸ்டர் பேட்மின்டன் தங்கம் ெவன்ற எஸ்.ஆர்.எம்., வீரர்
ஒடிசா மாஸ்டர் பேட்மின்டன் தங்கம் ெவன்ற எஸ்.ஆர்.எம்., வீரர்
ADDED : டிச 18, 2024 11:57 PM

சென்னை, 'ஒடிசா மாஸ்டர்ஸ் - 2024' பேட்மின்டன் போட்டி, ஒடிசா மாநிலம், கட்டாக் பகுதியில் நடந்து வருகிறது. போட்டியில், சர்வதேச வீரர்கள் உட்பட, 100க்கு மேற்பட்டோர் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர்.
இதில், ஆடவர் ஒற்றையர் பிரிவில், சென்னை எஸ்.ஆர்.எம்., மாணவன் ரித்விக் சஞ்சீவி, இந்தியா சார்பில் பங்கேற்றார். அரையிறுதியில், இந்தியாவின் ரித்விக் சஞ்சீவி, தாய்லாந்து வீரர் அனிச்சபோன் தீராட்சகுல் மோதினர்.
அதில், 21 - 17, 21 - 14 என்ற கணக்கில், ரித்வீக் சஞ்சீவி வெற்றி பெற்றார்.இறுதிப் போட்டியில், ரித்விக் சஞ்சீவி மற்றும் மற்றொரு இந்திய வீரர் தருண் மண்ணேபள்ளியும் எதிர்கொண்டனர்.
விறுவிறுப்பான ஆட்ட முடிவில், 21 - 18, 21 - 16 என்ற கணக்கில், ரித்விக் சஞ்சீவி வெற்றி பெற்று தங்கம் வென்றார்.