/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் மேற்பார்வையாளர்கள் நியமனம்
/
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் மேற்பார்வையாளர்கள் நியமனம்
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் மேற்பார்வையாளர்கள் நியமனம்
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் மேற்பார்வையாளர்கள் நியமனம்
ADDED : ஜூலை 10, 2025 12:23 AM
சென்னை, சென்னை மாநகராட்சியில், முதற்கட்டமாக 109 வார்டுகளில் நடைபெறும், உங்களுடன் ஸ்டாலின் முகாம் மேற்பார்வையாளராக சுகாதார ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளில், வரும் 15ம் தேதி முதல், நவ., 15ம் தேதி வரை, 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
முதற்கட்டமாக, ஆக., 14ம் தேதி வரை, 109 வார்டில் இம்முகாம் நடைபெறும். இதற்காக, தன்னார்வலர்கள் வீடுவீடாக சென்று, பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்து, விண்ணப்பம் வழங்குகின்றனர். இம்முகாமின் மண்டல நோடல் ஆபீசராக, மேற்பார்வை பொறியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், முகாம் நடைபெறும் 109 வார்டுகளிலும், 109 மேற்பார்வையாளராக, சுகாதார ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள், அந்தந்த வார்டுகளில் நடைபெறும் முகாமை கண்காணித்து நடத்துவர் என, அதிகாரிகள் கூறினர்.