/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'நலம் காக்கும் ஸ்டாலின்' ஒரு நாள் முகாம் சாப்பாட்டு செலவு மட்டும் ரூ.4.51 லட்சம்!

ADDED : அக் 30, 2025 12:27 AM
தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சியில் ஒரு நாள் நடந்த 'நலம் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ முகாமில், சாப்பாட்டுக்கான செலவு மட்டும், 4.51 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
தமிழக அரசின் 'நலன் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ முகாம், தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட, கிழக்கு தாம்பரம், கிறிஸ்துராஜா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், ஆக., 23ல் நடந்தது. இதில், அப்பகுதியைச் சேர்ந்த, 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
முகாமில் பங்கேற்றோர், பணிபுரிந்தோர் என, 650 பேருக்கு காலை, மதியம் என, இரண்டு நேரம் உணவு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு, 4.51 லட்சம் ரூபாய் செலவு செய்ததாக, மாநகராட்சி கணக்கு காட்டியுள்ளது. இந்த கணக்கு, கவுன்சிலர்களை மட்டுமல்ல, சமூக ஆர்வலர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இதுகுறித்து, நாளை நடக்க உள்ள மாநகராட்சி கூட்டத்தில் விவாதிக்கப்படும் என, கூறப்படுகிறது.