UPDATED : நவ 07, 2026 07:29 PM
ADDED : நவ 07, 2026 07:26 PM
அ நிறம் | அளவு
அண்ணாநகர்: அரசு மாநகரப் பேருந்தில் கல்லுாரி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
அயனாவரம் பகுதியைச் சேர்ந்த, 19 வயது பெண் தனியார் கல்லுாரியில், 2ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த, 6ம் தேதி அன்று இரவு வழித்தடம் எண், 46 பி பேருந்தில் தாயாருடன் பயணம் செய்தார்.
அப்போது பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் பெண்களிடம் தகாத முறையில் ஈடுபட்டதுடன் அவரது மகளிடமும் ஈடுபட்டுள்ளார். இதை பார்த்த பெண்ணின் தாயார் சக பயணியின் உதவியுடன் சில்மிஷத்தில் ஈடுபட்ட நபரை நையபுடைத்து அண்ணாநகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
விசாரணையில் ஓட்டேரியைச் சேர்ந்த ராமச்சந்திரன், 30 என்பது தெரியவந்தது. நேற்று அவரை போலீசார் கைது செய்தனர்.
