/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சுதா ரகுநாதன் பயிற்சியில் மாணவர்கள் அசத்தல்
/
சுதா ரகுநாதன் பயிற்சியில் மாணவர்கள் அசத்தல்
ADDED : ஜன 08, 2024 01:31 AM

அரிய செய்திகளை எளிய நடையில் உணர்த்தி, நாம சங்கீர்த்தனம் ஒன்றே பேரானந்தம் கொடுக்கும் என்பதை வலியுறுத்தி வருபவர், மகாரண்யம் ஸ்ரீ முரளீதர சுவாமிஜி. இவரால் எழுதப்பட்டது, கலிதர்ம உந்தியார் என்ற பாடல்.
இப்பாடலை பாடும்விதம் குறித்து, பத்ம ஸ்ரீ, பத்மபூஷன், சங்கீத கலாநிதி சுதா ரகுநாதன், மாணவர்களுக்குச் சிறந்த முறையில் நேற்று பயிற்சி அளித்தார். ராஜா அண்ணாமலைபுரம் செட்டிநாடு வித்யாஸ்ரம் பள்ளியில், சென்னையைச் சேர்ந்த 14 பள்ளிகளில் இருந்து 1,000த்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், இதில் பங்கேற்று, அவரிடம் ஆர்வமாக கற்றனர்.
கிருஷ்ணா ஸ்வீட்ஸ் கடைகளின் உரிமையாளர் முரளி, சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, அமெரிக்காவில் உள்ள மார்கழி உத்ஸவ் நிறுவனர் பிரியா முரளி செய்திருந்தார்.
- நமது நிருபர் -